அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்தார்.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கு அவருக்கு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தேவதாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்பு சீனிவாசன் பேசியதாவது:
அதிமுக ஆட்சிக்கு வந்தால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் வைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனைத்து தேவையும் அதிமுக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்படும். திண்டுக்கல்லுக்கு மருத்துவக் கல்லூரி திண்டுக்கல் காந்தி மார்க்கெட் புதிய கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலத்தில் தான். அதிமுக வெற்றி பெற்றால் மக்களின் செல்ல பிள்ளையாக நாங்கள் ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவோம். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி மீண்டும் முதல்வராவார்.
அவர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம், இலவச பஸ் பயணத்தில் ஆண்களும் பயணிக்கலாம், குலவிளக்கு திட்டத்தில் ரூ 2000 பெண்களுக்கு அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். மக்கள் அனைவரும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாற அவர் பேசினார். அவருடன் முன்னாள் மாநகராட்சி தலைவர் மருதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.



