• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாஜக சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 14, 2026

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் கடுமையாக உழைத்து குறிப்பாக புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளராக இருந்து வரும் நிர்மல் குமார் சுரானா கடுமையான தேர்தல் பணி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் நல்ல உடல் நலம் பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற புதுச்சேரி மாநில பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதி ஏற்பாட்டில் காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் காரைக்கால் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும் மாநில செய்தி தொடர்பாளருமான அருள்முருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.