• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பாஜக வேட்பாளர் என். இராமச்சந்திரன் அதிமுகவினருடன் வேட்பு மனு தாக்கல்..,

Byமுகமதி

Apr 4, 2026

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் என்.இராமச்சந்திரன். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேட்பாளர் ஆவார்.

இவர் பாஜகவை நிலைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள், கட்சியின் செயல்பாடுகள், அவரது மேடைப் பேச்சுகள் அனைத்தும் கட்சிக்காரர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றதாக இருந்தது கடந்த காலங்களில். அதனால் இவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு காலதாமதம் ஆனதும் கூட அந்த எதிர் பார்ப்பிற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது என சொல்லலாம். அந்த வகையில் அவர் நேற்று முன்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று காலையில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை, அம்பேத்கர் சிலை போன்ற முழு உருவச் சிலைகளுக்கெல்லாம் மாலை அணிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் அதிமுகவை சேர்ந்த மாநகர செயலாளர், பொறுப்பாளர்கள், பாஜகவின் பிரமுகர்கள் என பலரும் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டதோடு வெற்றிக்கான அறிகுறியோடு முழக்கமிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு அங்கிருந்து ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரும்போது இருபுறமும் மக்கள் நின்று ஆரவாரம் செய்தனர்.