• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பெண்ணைக் கட்டிப்பிடித்து வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்..,

Byமுகமதி

Apr 4, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன.விமல். இவர் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் தற்போது தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கட்சிக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு பயனாடைகள் அணிவித்து அவர்களிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்து வருகிறார்.

எவ்வாறு மக்கள் சொல்லும் பிரச்சினைகளை கேட்டுக்கொண்டு அதனை வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வரும்போது பேசலாம் என்பதற்காக குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை என்ற இடத்திற்கு வந்தபோது அங்குள்ள பெண் ஒருவர் நான் எனது குறைகளை சொல்வதற்கு இரண்டு நிமிடம் தாருங்கள் என்று கேட்டதோடு அவரது சொந்த சகோதரிக்கு உதவிகள் கேட்டு இப்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றதாகவும் அப்போது அவரது குறைகளை கேட்டுக்கொள்ள மறுத்ததோடு அங்குள்ளவர்கள் விரட்டி விட்டார்கள் என்றும் அதன் பிறகு நடிகர் விஜய் வீடு இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்றபோது அங்கும் அவர்கள் எந்த உதவியும் செய்ய முடியாது என்று அனுப்பி விட்டதால் இந்த தேர்தலில் அவர்கள் இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றும் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் வாக்களித்து அவரை முதல்வர் ஆக்க வேண்டும் என்று பேசினார்.

அதைக் கேட்டுக் கொண்டு அங்கு நின்ற வேட்பாளர் தன.விமல் உடனே அந்தப் பெண்ணுக்கு ஒரு சால்வையை போர்த்தி கட்டிப்பிடித்து உங்களைப் போன்ற பெண்கள் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொன்னதோடு இவர் சொல்வதை கேளுங்கள் இவர் யார் என்றே எனக்கு தெரியாது ஆனாலும் இந்த தேர்தல் களத்தில் யாரெல்லாம் நிற்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்து நமது எடப்பாடி யார் அவர்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும் அவர்தான் நாட்டுக்கு நல்லது செய்வார் என்று கூறுகிறார் அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று மற்றவர்களிடம் கூறினார். இதை பார்த்த அங்குள்ள கிராம மக்கள் இந்த வேட்பாளர் நம் மீது எவ்வளவு அன்பு பொழிகிறார் பாருங்கள் ஒவ்வொருவரும் இவரைப் போல் அல்லவா இருக்க வேண்டும். எல்லா வேட்பாளர்களும் எட்டி நின்று பேசுகையில் இவர் வந்து கட்டிப்பிடித்து அன்பு பாராட்டுகிறார் என்று நெஞ்சம் நெகிழ பேசினார்கள்.

அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பள்ளத்து விடுதி பழனிச்சாமி உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.அதிமுக வேட்பாளரின் இந்த செயல் தொகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.