குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும் குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வாக குவைத் தூதரக அதிகாரி மிசஸ் பரிமிதா திருபாதி அவர்கள் தீவிரமுயற்சி நாளும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாக அலிபாய் அவர்களின் தீவிரம் முயற்சியில் இந்த 24 சடலங்களும் கொச்சின் வழியாக வந்து அவரவர் ஊர்களுக்கு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் ஈரான் போரில் தாக்குதலில் காயம் அடைந்து ஒருவர் மட்டும் இறந்து விட்டார் அவர் பெயர் சந்தான செல்வம் முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் அவரது சடலமும் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டது இதில் தூதரக அதிகாரி அவர்களின் தீவிர முயற்சி லும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் தலைவர் அலிபாய் அவர்களின் தீவிர முயற்சியினாலும் அனைவரது உடல்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரான் தாக்குதல் போரில் உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு அரசு உதவி வேண்டுமென்று அவர்கள் குடும்பத்தினர் சார்பாகவும் குவைத் தமிழ் சேவை மக்கள் சார்பாகவும் பத்திரிக்கை வாயிலாக கோரிக்கை வைக்கப்படுகிறது. குவைத் தூதரகமும் அந்த குடும்பத்திற்கு நிதி கிடைக்க தக்க முயற்சி எடுப்பதாக சொல்லி உள்ளார்கள் தமிழகத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.





