மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரியில் இலவச கண் மருத்துவ முகாம் அங்கன் வாடி மையத்தில் நடந்தது. இந்த முகாமை கே.சி.எம் சேவா நிறுவன தலைவர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் கண் மருத்துவர் அனில்குமார் தலைமையில் மருத்துவகுழவினர் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில்10 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமில் சமூக சேவகர் முத்துப்பாண்டி, பாலகுமார்,மற்றும் முகாமை ஒருகிணைப்பாளர்
ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





