• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு..,

ByP.Thangapandi

Mar 28, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.,

இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது.

இதில் வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ந் தேதியும் வேட்பு மனு திரும்பப்பெற ஏப்ரல் 9 ந் தேதி நடைபெறுகிற சூழலில்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.,

இதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை (VVPAT) பயன்படுத்துவது உள்ளிட்ட வாக்குச்சாவடியில் பல்வேறு நடைமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது., இதில் 35 மண்டல அலுவலர்களுக்கான 37 பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இதில் 1600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.,

இந்த பயிற்சி வகுப்பினை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு மேற்கொண்டனர்.