• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஐ. மகேந்திரன் அறிவிப்பு..,

ByP.Thangapandi

Mar 27, 2026

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.,

இந்நிலையில் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது.,

இதில் வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ந் தேதியும் வேட்பு மனு திரும்பப்பெற ஏப்ரல் 9 ந் தேதி நடைபெறுகிற சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து

இன்று அதிமுக சார்பில் அதிமுக தலைமை கழகம் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்ட சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வுமான ஐ. மகேந்திரன் அறிவிக்கப்பட்ட சூழலில்

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நகர செயலாளர் பூமாராஜா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.,
தொடர்ந்து எழுச்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க, புரட்சித்தலைவி அம்மா வாழ்க, வெற்றி வேட்பாளர் ஐ.மகேந்திரன் வாழ்க என கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.,