• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் தலைமை தாங்கி உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார்.

இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்த குடிமக்களாகிய நாம் மதம் இனம் சாதி சமூகம் மொழி அல்லது பிற காரணங்களால் பாதிக்கப்படாமல் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று உறுதியளிக்கிறோம் என்று உறுதிமொழி வாசித்தார்.

உதவி தேர்தல் அதிகாரிகள் தாசில்தார் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார், ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஜெயராஜ், கிராம உதவியாளர்கள் சண்முகம் உள்பட தாய் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் வாக்களிப்பது எங்கள் உரிமை வாக்களிப்பது எங்கள் கடமை எங்கள் வாக்கு விற்பனைக் கு அல்ல என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி மாணவிகள் கோஷமிட்டபடி வந்தனர்.

இந்த ஊர்வலம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தொடங்கி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலையம் பழைய போஸ்ட் ஆபீஸ் பஸ் நிலையம் வழியாக சந்தை கேட் வரை சென்றது.