• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!!

ByS.Ariyanayagam

Mar 27, 2026

கோபால்பட்டி அருகே தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே செடிப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி அழகம்மாள்(65) இவர்களது மகன் சின்னபொதியன்(47) இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்தார்.

இவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தாய் அழகம்மாளுக்கும் மகன் சின்னபொதியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த சின்னபொதியன் தாய் அழகம்மாளின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த புறநகர் DSP.சங்கர் தலைமையில் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த சின்னபொதியனை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.