• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பள்ளி வேன் மோதிகொத்தனார் பலி -வாலிபர் படுகாயம்..

ByKalamegam Viswanathan

Mar 27, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில்வசித்து வந்தவர் சூரியபிரகாஷ் (வயது 25) கொத்தனார். இவரது நண்பர் விஷ்ணு(25). இவர்கள்நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில் உள்ள உறவினர் ஒருவரின்
வீட்டிற்கு விஷேசத்திற்காக இரு சக்கர வாகனத்தில்சென்றுள்ளனர்.

பின்னர்அங்கு இருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.தென்பழஞ்சி – திருநகர் ரோட்டில் சென்றபோது திருநகர் 3-வது பஸ் நிறுத்ததில் உள்ளஒரு தனியார் மெட்ரிகுலேசன்மேல்நிலைப் பள்ளியின் பள்ளி வாகனம்வந்த வேகத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியது அதில்சூரிய பிரகாஷ், விஷ்ணு ஆகிய 2 பேரும்இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி ரோட்டில் வீசப்பட்டார். அதில்படுகாயம் அடைந்து மயங்கி நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்தவர்கள் சூரியபிரகாஷ், விஷ்ணுவைகாப்பாற்றி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் போகும் வழியிலேபரிதாபமாக சூரிய பிரகாஷ் இறந்து போனார்.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில்விஷ்ணு அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாகஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.