சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது. வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தனர்.

தொடர்ந்து மாப்பிள்ளை பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது,கோயில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பட்டர்கள் யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் உபயதாரர் சௌந்தர்யம்மாள் குடும்பத்தினர், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்கே முருகேசன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், எல்ஐசி கதிரேசன், சுரேஷ்உகந்தாட்சி, கோவில் செயல்அலுவலர் தாரணி, வடக்கு வீதி வெள்ளாளர் ஒருமுறை சங்கத் தலைவர் சுகுமாரன் முன்னாள் தலைவர் ராஜகுமாரன்,வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், செல்வராணி ஜெயராமச்சந்திரன், சன்னதி நண்பர்கள் கண்ணன், முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சன்னதியில் நண்பர்கள் சார்பாக அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வண்ண மின்விளக்கு அலங்காரத்தில்கோ ரதத்தில் சுவாமி அம்பாளும் நான்கு ரத வீதி பவனி வந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.




