• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அனைவரும் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

BySubeshchandrabose

Mar 25, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது

இதற்காக தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ரஞ்சித் சிங் வெளியிட்டார்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை திறந்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்தி 100% வாக்கு பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் இலச்சினை முன்பு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இதில் வருவாய் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்