• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை..,

திண்டுக்கல், மார்ச்.25-தமிழக முழுவதும் உள்ள இளம் வாக்காளர்களைச் சந்தித்து திராவிடமாடல் அரசின் சாதனைகளையும், மக்கள் விரோத என்.டி.ஏ. கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநில செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய போது கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் திமுக இளைஞரணி நிர்வாகிகளைக் கொண்டு, பாகம் வாரியாக இளம் வாக்காளர்களைச் சந்தித்து திராவிடமாடல் அரசின் சாதனைகளையும் மக்கள் விரோத என்.டி.ஏ. கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்யும் இளைஞர் அணியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்கும் அதிமுக பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து திமுக தலைவர் முதலமைச்சர் முக.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அனைவரும் உறுதியோடு சட்டமன்றத் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான இந்த ஜனநாயகப் போரில் வெல்ல, களத்தில் இளைஞர் அணி என்ற நம் பிரச்சாரப் பயணத்தில் கழக இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகியும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம். இவ்வாறு துணை
முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன், ஒன்றிய செயலாளர்கள் வேடசந்தூர் வீரா எஸ்.டி.சாமிநாதன், திண்டுக்கல் நெடுஞ்செழியன், ஒட்டன்சத்திரம் ஜோதிஸ்வரன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், அனைத்து பிரிவு திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.