• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது

ஆண்டிபட்டி அருகே இளம் பெண்ணை ரகசியமாக ஆபாச புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி சுமதி(54). இவருக்கும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அருள்குமரன்(39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் சுமதி அடிக்கடி அருள்குமரன் வீட்டில் தங்கியிருப்பது வழக்கம். இதில் அருள்குமரன் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமதி அவரது 27 வயதுடைய மகளுடன் அருள்குமரன் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது அவருடைய மகள் பாத்ரூம் செல்லும் போது பலமுறை ரகசியமாக ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகளை திருமணம் முடித்தது போல புகைப்படம் எடுத்து யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று இருவரையும் தொலைபேசியில் மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் சுமதி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருள்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக அருள்குமரனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருந்ததாகக் கூறி அவரது அம்மா சரோஜா அப்பா முருகேசன் தங்கை மீனா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.