• Fri. Mar 29th, 2024

ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து பட்டம் பெற முயன்ற மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து..,சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி..!

Byவிஷா

Dec 22, 2021

ஆன்லைன் தேர்வில் மோசடி முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 117 பேர் பிடிபட்டனர். 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி தொலைதூரக் கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது வெளிச்சத்துக்கு வந்தது.


117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் முன் அவர்களின் செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த பல்கலைக்கழக நிர்வாகம், 117 பேரின் பெயர்கள் இல்லாததால் அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை. தொலைதூரக் கல்வி மையங்களை நடத்துவோர் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக சான்றிதழ்கள் பெற்றுத்தர முயற்சித்ததாக பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு. வேறு பலரும் முறைகேடாக தேர்வு எழுதி உள்ளார்களா என விசாரணை மேற்கொள்ள விசாரணைக் குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி ஆணையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *