• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சட்ட விழிப்புணர்வு முகாம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி கிழக்கு பூத்தாம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் அகில இந்திய மக்கள் நல கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை. உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாம் தொடக்க விழாவிற்கு மாநில இணை செயலாளர் கே.தங்கபாண்டியன் தலைமையேற்றிப் பேசினார். இளைஞர் அணி மாநில தலைவர் எம். நவநீதிகிருஷ்ணன் முன்னிலை வைத்து பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் வி.தண்டபாணி வரவேற்று பேசினார்.

அகில இந்திய மக்கள் நல கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் வழக்கறிஞர் பி.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஒரு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, சட்ட ஆலோசனைகள் கூறி விழிப்புணர்வு கருத்துக்களை கூறி பேசினார்.

இம் முகாமில் திண்டுக்கல் மண்டல தலைவர் பாலன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் நத்தம் ஸ்டாலின், திண்டுக்கல் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள்.

இம்முகாமில் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.