• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம்..,

ByS.Ariyanayagam

Jun 19, 2026

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனப் பயிற்சிகள் நடந்தது.
பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் ஞான சீலா அனைவரையும் வரவேற்றார். மாணவ ,மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை பேராசிரியர்கள் மாதவன், பஞ்சவர்ணம் வழங்கினர். பள்ளி தாளாளர் சேசுஆரோக்கியம் பேசியதாவது: ஐ.நா.சபையே இந்தியாவின் யோகா கலைக்கு பெருமை சேர்த்துள்ளது. பதஞ்சலி முனிவரின் யோக கலை மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, உடல் ஆரோக்கியத்தை பேணுவதாக உள்ளது. நமது பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓய்வு நேரங்களில் யோகாவை நீங்கள் செய்யலாம். மேலும் உங்கள் வீட்டில் உள்ள அத்தனை பேரும் யோகா கற்றுக் கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் நண்பர்கள் உறவினர்களுக்கும் இந்த யோகா கலையை அவசியத்தை பற்றி நீங்கள் எடுத்துரைக்க வேண்டும் .. உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்ய முடியும். படித்து அதிக மதிப்பெண் பெறுவதற்கு யோகா மிகவும் அவசியமான ஒன்று. அதை தினமும் பயிற்சி செய்து நாம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அறிவு திருக்கோயிலை சேர்ந்த யோகா பேராசிரியர்கள் மாதவன் ,பஞ்சவர்ணம் கூறியதாவது:
யோகா என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் ஒரு பழங்கால அறிவியல் மற்றும் கலை. இது உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. உங்கள் தேவைக்கேற்ப எளிதாகப் புரிந்துகொள்ள நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். இதை வீடுகளில் நீங்கள் தினமும் அரை மணி நேரமாவது செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். மாணவர்களுக்கு கண் பயிற்சி, முதுகு தண்டு பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி உட்பட பல பயிற்சிகளை செய்து காட்டினார்.