• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்..,

ByP.Thangapandi

Mar 20, 2026

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் வாக்களிக்க தயாராகுங்கள், வாக்கு விற்பனைக்கு அல்ல, 100% தவறாமல் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி பேரையூர் சாலை, மதுரை சாலை, தேவர் சிலை வழியாக உசிலம்பட்டியின் முக்கிய சாலை வழியாக சென்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.