மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கி முன்பாக தேர்தல் நிலை கண்கா ணிப்பு குழு அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ் பெக்டர் சரஸ்வதி ஏட்டு கனகராஜ் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது தேனியை சேர்ந்த கோபாலகிருஷ் ணன் என்பவர் போட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முத்துராமன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஏட்டு மீனா ஆகியோர் முள்ளி பள்ளம் சினிமா தியேட்டர் முன்பு வாகன சோதனை செய்தனர். அப்போது ஜீப்காரில் வந்த வடகாடுபட்டி வீரண்ணன் என்பவரது காரை சோதனை செய்தபோது எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்தி ருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாபு காந்தி, ஏட்டு காயத்ரி ஆகியோர் நாராயணபுரத் தில் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பாப்பாபட்டி விளாம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.51,900 பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை அதிகாரி வெங்கடேஷ்வரி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சுதா,ஏட்டு பிரபாகர் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது மேட்டுநீரேத் தான் ஊரணி முன்பாக கொக்குளத் தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை செய்த போது எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.
1 லட்சத்து 3 ஆயிரம் பறிமுதல் செய்தனர். அதே போல்நிலைக் கண்ணிப்பு குழுஅதிகாரி
அலெக்ஸ் பாண்டியன் தலைமை யில் சப் இன்ஸ்பெக்டர் இருளப்பன்,
ஏட்டு லலிதா ஆகியோர் செம்மினி பிரிவில் வாகன சோதனை செய்த போது குட்லாடம்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் ஓட்டி வந்த காரில் எந்த வித ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.73,500பறிமுதல் செய்தனர்.
இதில் மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 400 வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் வாடிப்பட்டி சார் நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



