• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்..,

ByP.Thangapandi

Mar 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை.,

செல்லம்பட்டி ஒன்றியத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்ற சூழலில்,

ஆரியபட்டி கிராமத்தில் இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் விவசாய நிலத்தில் உரிய பாதுகாப்பின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிக சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.,

நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்தில் எடுக்க வேண்டிய நிலையில் சுமார் ஒரு மாதங்களாகியும் எடுக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.,

மேலும் மதுரை மாவட்டத்தில் சுமார் 116 மையங்கள் உள்ளதாகவும், 123 லாரிகள் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது., ஒரு மையத்திற்கு இரண்டு லாரிகள் வீதம் நாள் ஓன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழல் இருந்தும் இதுவரை நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்தாக கூறப்படுகிறது.,

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகள் பெருத்த சேதமடைவதற்கு முன்பு நெல் மூட்டைகளை கிட்டங்கிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.