• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா..,

ByK Kaliraj

Mar 16, 2026

சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் டாக்டர் விவேக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் ஜோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த நற்செய்தியாளர் குப்புலட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசியது மென்பொருள் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், புதுமை சிந்தனை மற்றும் நேர்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்..

சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தமிழ் பேச்சாளரும் நடிகருமான ஞானசம்பந்தன் கலந்து கொண்டு, தனது நகைச்சுவை கலந்த சிந்தனையூட்டும் உரையின் மூலம் மொழி, பண்பாடு மற்றும் மாணவர் வாழ்க்கையின் மதிப்புகளை வலியுறுத்தி சிறுபுரையாற்றினார். முதல்வர் டாக்டர் . செல்வபாரதி கல்லூரியின் கல்வி சாதனைகள், பல்கலைக்கழக தரவரிசைகள், வேலைவாய்ப்பு பதிவுகள் மற்றும் இணைபாடச் செயல்பாடுகளில் மாணவர்கள் பெற்றுள்ள வெற்றிகளை வெளிப்படுத்தும் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், முன்னதாக கல்லூரி வளாகத்தில் வான வேடிக்கை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.