• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

முடிச்சூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByPrabhu Sekar

Mar 16, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் முடிச்சூர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முடிச்சூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் க. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா கலந்து கொண்டார். அவர் திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ச. விசாலாட்சி, கிளை செயலாளர்கள் பி.எஸ். ரமேஷ், சுனில் மேத்யூ, குமார், வி.ஆர். குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் சத்தியா சந்திரன், இளைஞர் அணி நிர்வாகிகள் நூர்முகமது, விக்னேஷ், ரவி வர்மா உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.