• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம்..,

BySeenu

Mar 16, 2026

ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ பொள்ளாச்சி அருகில், இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தென்னிந்தியாவின் பிரபலமான முதியோர் குடியிருப்பு உருவாக்குனர் நிறுவனங்களில் ஒன்றான ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட நாட்டின் முதல் 3-இன்-1 முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டமான ‘ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ (Srinivasa Palms)-ஐ உருவாக்கியுள்ளது.

இதன் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர், ஃபேர்ஃபீல்ட் பை மேரியட் (Fairfield by Marriott) ஹோட்டலில் மார்ச் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்நிறுவனத்தின் கண்காட்சியில் வீடு வாங்குவோருக்கு, பத்திரப் பதிவு இலவசமாக செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகில், தென்னந்தோப்புகளுக்கு இடையே இக்குடியிருப்புத் திட்டம் அமைந்துள்ளது. 160 குடியிருப்புகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. முதியோர் பராமரிப்பு உதவி மற்றும் சமூகத்துடனான ஒன்றிய வாழ்க்கை ஆகிய மூன்றையும் ஒரே குடியிருப்புக் கட்டமைப்பில் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான மோதிஷ் குமார், முதியோர்களுக்கு அமைதியான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றார்.