கோவையில் ஆகஸ்ட் 9 ந்தேதி நடைபெற உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமிற்கான போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது…

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க நாடுகளிலும். மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்…
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் இராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது..
இதில்,,முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறுகையில்,
கோவையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த முகாம் நடைபெறுவதாகவும், முன்னதாக கடந்த மே மாதம் அளவீடு செய்யப்பட்டவர்களுக்கு செயற்கை மூட்டுகள் தயார் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பொருத்த இருப்பதாக தெரிவித்தனர்…

ஆகஸ்ட் 9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை சோமையம்பாளையம், கே.என்.ஜி. புதூர் பிரிவு, தடாகம் மெயின் ரோட்டில் உள்ள மகேஷ்வரி பவான் வளாகத்தில் நடைபெறும் முகாமில்,ஜப்பான் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண தொழில் நுட்ப (3D Printed Narayan Modular) செயற்கைக் கால் மற்றும் கைகள் தேர்ந்த மருத்துவர்களை கொண்டு பொருத்த உள்ளதாக தெரிவித்தனர்…

மாற்றுத்திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தன்னம்பிக்கையுடனும் சுயநிறைவு வாழ்க்கையுடனும் வாழ உதவும் நோக்கில், தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பான நாராயண் சேவா சன்ஸ்தான் இந்த முகாமை இரண்டாவது முறையாக கோவையில் நடத்த உள்ளது குறிப்பிடதக்கது.. தொடர்ந்து நடைபெற்ற முகாம் தொடர்பான தகவல் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,, அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா,மகேஷ்வரி சபா தலைவர் தாமோதர் பிரசாத் சோமானி,
,ஜிதேந்திரா புகாலியா,பிரதீப் கர்னானி ஆகியோர் வெளியிட்டனர்…





