• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டிச.24 முதல் ஜனவரி 2 வரை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால நீதிமன்ற வேலை நாளில் (அதாவது வருகிற 29-ஆம் தேதி மட்டும்) பணியாற்றும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர்.

டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்த பின்பு தனி அமர்வில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அனைத்து ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார். நீதிபதி ஸ்ரீமதி, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி ஆனந்தி, அனைத்து கிரிமினல் மனுக்களையும் விசாரிக்கிறார்.
வக்கீல்கள் தங்களின் வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பும்படி உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.