தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய திமுகவை கண்டித்து வரும் 17ம் தேதி விருதுநகரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி,

நாடாளுமன்ற மேல்சபையில் அதிமுக மேல்சபை எம்பி இன்ப துறை தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, காட்டாட்சி நடைபெறுவதாகவும், ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கருத்தை பதிவு செய்துள்ளார்
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தும் தமிழக அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் செத்துப்போய் கிடக்கிறது
தமிழகத்தில் மக்கள் அச்சத்தோடு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் அவர்களை எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் கட்சி நிர்வாகியாக இருக்க அனுமதிக்க மாட்டார்
உழைப்பவர்களுக்கு பொறுப்புகளை கொடுக்கும் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் பொறுப்பில் இருந்ததால்தான் அதிமுகவின் வெற்றி எளிதாக இருக்கும், துரோகம் செய்பவர்களை உள்ளே வைத்துக்கொண்டால் நமது திட்டங்கள் அனைத்தும் எதிராளிகளுக்கு சென்றுவிடும்
1991ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது திமுக ஆட்சிக்கு எதிராக அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டேன், சிறையிலிருந்து நான் திரும்பி வரும்போது திமுக ஆட்சியே இல்லை
1991ம் ஆண்டு திமுக ஆட்சியின் கடைசி நேரத்தில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது, அதேபோல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை உறுதியாக உருவாக்கும்
தமிழகத்தில் எந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழலை உருவாகியுள்ளது திமுக ஆட்சிதான்,
நிர்வாகம் சரியில்லாத திமுக அரசு எதற்கெடுத்தாலும் காரணங்களை சொல்லி தப்பித்துக்கொள்ளும் வேலையை செய்கிறது
தமிழகத்தில் திமுக ஆட்சியைப் போல் மிகப் பெரிய மோசமான ஆட்சியை தமிழகம் கண்டதில்லை சூழ்நிலை உருவாகியுள்ளது

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து போராடி வருகிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ள வலையில் திமுக வகையாக சிக்கிக்கொள்ள போகிறது.
எடப்பாடியார் திமுகவை சுற்றி வலை வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ள வலை என்ன என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் அந்த வலையில் சிக்கிக்கொண்டு திமுக வரவே முடியாது.
திமுக கட்சிக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெருத்த ஏமாற்றத்தை இந்த தேர்தல் கொடுக்கும் நல்ல ஒரு ஜனநாயக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தருவார்.
விருதுநகர் மாவட்டத்தில் நாம் வைத்தது தான் சட்டம் என்பதை நிலை நிறுத்தும் வகையில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும்.
நம்மை எதிர்க்கின்ற துணிச்சல் எவனுக்கும் கிடையாது திமுகவிற்கு எந்த காலத்தில் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.



