தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மேற்குவங்கம் மாநிலத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மற்ற மூன்று மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியதாவது:
தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23ம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ம் தேதி நடக்கிறது. கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மேற்குவங்கம் மாநிலத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.



