தமிழக சட்டமன்றத்திற்கு 2026_பொது தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால்.
நாகர்கோவில் மாநகராட்சி வரவு,சில்வு திட்டம் அறிவிக்க முடியாது என்ற நிலையில்.
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடக்கும் நிலையில். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக இன்று
நாகர்கோவிலில் மாநகராட்சி வரவு செலவு திட்டத்தை மேயர் மகேஷ் தாக்கல் செய்தார்.

மேயர் மகேஷ் தாக்கல் செய்த வரவு செலவு திட்டத்தில் வரவு ரூ.335.03 கோடி
செலவு ரூ.345.22.கோடி. பற்றாக்குறை ரூ.10.கோடி. பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் மேயர் மகேஷ். நாகர்கோவில் முதல் மாநகராட்சியின். 52_,வது வார்ட் பாஜக உறுப்பினர் ரமேஷ் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி நிகழ்விற்கு பின் பேசிய மேயர் மகேஷ்.
நாகர்கோவிலில் முதல் மாநகராட்சியின் முதல் உறுப்பினராக நம்மோடு கடந்த கால அவை கூட்டங்களில் நம்மோடு பயணித்த பாஜக உறுப்பினர் ரமேஷ் இன்று நம்மோடு இல்லை.
ரமேஷ் யின் இரண்டு மகள்களின் கல்லுரி படிப்பு தேவைக்காக என்னால் இயன்ற
சிறு தொகையை வழங்க இருக்கிறேன். இந்த அவையின் உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை மறைந்த ரமேஷ்யின் இரண்டு மகள்களின் கல்வி உதவிக்கு கொடுக்க முன் வந்தால் இந்த மனித நேயம் மிகுந்த செயலால் ரமேஷின் மகள்களுக்கு உதவியாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.



