• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வளைகுடா போர் நிறுத்தம் ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் மற்றும் மனவளக்கலை மன்றம் இணைந்து வளைகுடா போர் நிறுத்த கூட்டுப் பிரார்த்தனை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மனவளக்கலை பேராசிரியர் மணவாளன் தலைமை தாங்கினார்.

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர அருளானந்தம், செமிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன் ஹார்ட் புல் னஸ் தியான ஆசிரியர் சங்கர பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற நீதிமன்ற பணியாளர் தங்கராஜ் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் வரும் 15ந்தேதி ஞாயிறன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆர்.வி.நகரில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வளைகுடா நாடுகளின் போர் – நிறுத்தம் செய்யவும், உலக அமைதி வேண்டி சர்வ சமயக் கூட்டுப் பிரார்த்தனை செய்வது பற்றி
ஆலோசிக்கப்பட்டது. முடிவில் மின் கம்பி பணியாளர் கணேசன் நன்றி கூறினார்.