• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கலைக் கல்லூரியில் லேப்டாப் வழங்கும் விழா ஐ பெரியசாமி பங்கேற்பு..,

ByPuthar Pandian P

Mar 11, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூட்டுறவு கலைக் அறிவியல் கல்லூரி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு (லேப்டாப்) மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி,ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராமன், ராஜேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் கூட்டுறவு கலைக் கல்லூரியின் நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.