திருச்சியில் நடைபெற்றது திமுக நிர்வாகிகள் கூட்டம் தான் எனவும் இதற்கே 10 லட்சத்துக்கு மேற்பட்ட கட்சியினர் வந்தது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான அச்சாரம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி புதுக்கோட்டை மாநகரின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி டவுன்ஹாலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழக திமுக பற்றி பவன் கல்யாண் பேசினாலும் தவன் கல்யாண் பேசினாலும் திமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது தமிழகத்தை பொறுத்தவரை தங்களுடைய அணி பாலம் வாய்ந்த அணி எனவும் 2வது அணி 3வது அணி என எந்த அணி வந்தாலும் எங்களுடைய அனியை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் தமிழகத்தில் சமையல் எரிவாயு பிரச்சனையை தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் எனவும் தமிழக வெற்றி கழகத்தை பற்றியும் விஜய் பற்றியும் நாங்கள் எந்த கவலையும் அடையவில்லை எனவும் அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை எனவும் விஜய் நடிக்கும் படங்களில் 80 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து 920 ரூபாயை கருப்பு மணமாக சேமித்து வைப்பதாகவும் அதைப்பற்றி நாங்கள் பேசினால் பிரச்சனை அவருக்கு தான் எனவும் விஜய் அறியாமலம் புரியாமலும் பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடக்காத சட்டம் ஒழுங்கு பிரச்சனையா தற்பொழுது நடக்கிறது எனவும் இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு சிறப்பாக சட்டம் ஒழுங்கை பார்த்து வருவதாகவும் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் அரசாக திமுக திகழ்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி போன்று குற்றவாளிகளை தப்ப விடும் அரசு நாங்கள் இல்லை என தெரிவித்தார் தமிழகத்தை பொறுத்தவரை பெண்களுக்கு வழங்கப்படும். உரிமைத்தொகை இலவச தொகை அல்ல எனவும் குடும்பப் பெண்களுக்கு தேவைப்படும் பணத்தை உரிமை தொகையாக நாங்கள் வழங்குவதாகவும் அதை இலவசமாக யாரும் நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் மகளிர் உரிமை தொகை 2000 ரூபாய் எங்களால் வழங்க முடியும் எனவும் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் ஏதாவது ஒரு இடத்தில் லாக்கப் டெத் நடந்தால் அதன் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிபோல் காவல்துறையினர் யாரையும் அடித்துக் கொள்ளவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவரும் முதலமைச்சர் ஆக ஸ்டாலின் திகழ்வதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் C டீமாக செயல்படுபவர் தான் நடிகர் விஜய் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



