கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோவாளையில்
சக்தி மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம், அறக்கட்டளைகளையின் தலைவர் சாந்தினி பகவதியம்மன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி
அ.தி.மு.க உறுப்பினர் தளவாய் சுந்தரம், திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம். முதல்வர் அம்மா மனதில் எழுந்த ஒரு கேள்வி. அரசின் திட்டங்கள் எல்லாம் கிராமபகுதிவரை எட்டியுள்ளதா.? என்பது.
அம்மா மனதில் ஒரு புதிய சிந்தனை தோன்றியதை, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்வதற்கு முன் முதலில் என்னிடம் தான் சொன்னார். அந்த திட்டம் தான். பள்ளி மாணவர்களுக்கான
இலவச சைக்கிள் திட்டம்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம் கிராமத்தில் மட்டும் அல்ல நகர பகுதிகளிலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து அம்மாவின் மனதில் உருவானது.பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான
மடிக்கணினி திட்டம்.
இன்றைய முதல்வர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கிறார் என தெரிவித்தவர் அடுத்து சொன்னது.

கழக பொதுச் செயலாளர் இப்போது பெண்களுக்கு ஒரு உறுதிமொழி கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் உரிமையை தாருங்கள். ஆட்சி அமைந்ததும் பெண்கள் தொழில் செய்வதற்கு ரூ.10,000_ம் திட்டத்தை நிறைவேற்ற இந்த மகளிர் தினத்தில் தமிழக பெண்கள் உறுதிமொழி எடுத்துக்கொள் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்ற பெண்களுக்கு திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வின் நிறைவில் அனைவருக்கும்
உணவு விருந்து நடைபெற்றது.



