• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கருணாநிதியின் அரசியல் நிழல் மறைந்தது

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கருணாநிதியின் அரசியல் வாழ்வின் ஆவணம். உதவியாளர் சண்முக நாதனுக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு யாரும் புரிந்து கொள்ள முடியாத அளவில் இருந்தது.


கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை முழுவதுமாக அறிந்தவராக சண்முகநாதன் திகழ்ந்தார் என்று கூறினால் அது மிகையாகாது.