பேயரளவிற்கு செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல மாணவ மாணவிகள் அச்சம்.பள்ளிகளில் ஐந்து முதல் 13 மாணவ மாணவிகள் பயின்று வரும் சூழ்நிலை உள்ளது.

தங்குவதற்கு வழி இல்லை .சமைப்பதற்கு வழி இல்லை மாணவ மாணவிகளுக்கு இரண்டு வேளை மட்டும் உணவு .மாணவ மாணவிகளுக்காக ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது. இப்படி பல்வேறு கேள்விகளில் உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள கே சி பட்டி. ஆத்தூரில் உள்ள மஞ்சள் பரப்பு. கொங்கு பட்டி அதன் வரிசையில் தற்போது வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைக்காடு பள்ளியும் இணைந்துள்ளது.
இரண்டு முதல் மூன்று ஆசிரியர்கள் சமையலர் என அரசு பள்ளிகளில் அமர்த்தி உள்ள போதும் போதிய மாணவர்கள் இல்லாமலும் எதற்காக உண்டு உறைவிட பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதை மாவட்ட ஆதிதிராவிட பழங்குடியின அதிகாரிகள் மறந்து விட்டதால் , ஆதிதிராவிட பழங்குடியினருக்கு பயனில்லாமல் பள்ளிகள் உள்ளது.







