திண்டுக்கல் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.

குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:
பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மக்கள் இறந்தால் மணப்பாறை மற்றும் குஜிலியம்பாறை இடைப்பட்ட பகுதியில் உள்ள சாலையில் தான் பிணங்களை நாங்கள் புதைத்தும் ,. எரியுட்டியும் வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு அந்தப் பகுதியை சுடுகாடாக மாற்றி குடிநீர் தங்குமிடம் காத்திருப்பு அறை,ஆகியவற்றை அளிக்குமாறு வேண்டுகிறோம்.
தங்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் திரண்டு வந்துள்ளோம். இனியும் தாமதித்தால் நாங்கள் போராடுவதை தவிர வேறு வழி இல்லை,என்றனர்.







