• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

ByS.Ariyanayagam

Mar 2, 2026

தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக் கூறியதாவது:
எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உண்டு. எனது மகன் சந்திரசேகரன் எனக் கூறிய ஒரு ஏக்கர் 5 5 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு என்னை கவனிக்க மறுக்கிறார்.

தற்போது நான் உணவுக்கு அலைய வேண்டிய நிலையை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எனது மகளிடமிருந்து சொத்துக்களை பிரித்து எனக்கு ஜீவாசனம் செய்வதற்கு உதவு வேண்டும், என அதிகாரிகள் முன்பு கண்ணீர் மல்க கூறினார்.