• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை தகவல்..,

ByP.Thangapandi

Feb 28, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

கேரளா பகுதியில் காகங்கள் இறந்து கிடந்ததை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.,

அண்மையில் சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்து கிடந்த சூழலில்., அதையும் ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.,

இதே போல் மதுரை மாவட்டத்திலும் காகங்கள் உயிரிழந்து கிடப்பது குறித்து கால்நடை மற்றும் சுகாதார துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்விற்காக சில காகங்களை எடுத்து சென்ற பின், மீதமுள்ள காகங்கள் பாதுகாப்பான முறைகளுடன் அகற்றப்பட்டன.,

இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் பகுதியில் காகங்கள், புறா உள்ளிட்ட பறவைகள் கூட்டமாகவே அல்லது அசாதாணமான முறையிலோ இறந்து கிடப்பதை கண்டால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் அளிக்குமாறு மதுரை மாவட்ட சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.,