• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

முதியோருக்கு உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

ByKalamegam Viswanathan

Feb 28, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சிம்மக்கலில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கினார்.

இளம் வயதினருக்கு சமூகப் பொறுப்பை வளர்க்கும் பயிற்சியாக கல்லூரி மாணவிகள் ரிஸ்வானா, ஸ்ரீதுர்கா, சாந்தி, சபரி ஆகியோர் உணவு பரிமாறி முதியோருடன் உரையாடினர். நிகழ்ச்சியில் அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி, சமூக ஆர்வலர்கள் இல.அமுதன் மற்றும் ரமேஷ்குமார் கலந்து கொண்டனர். இல்லத்தின் பொறுப்பாளர் கிரேசியஸ் நன்றி தெரிவித்தார்.