• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆர். நல்லகண்ணுக்குஅனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம்..,

ByK Kaliraj

Feb 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள டி.என்.சி ஆலங்குளத்தில் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் அமைதி ஊர்வலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் “தகை சார் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைவிற்கு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் டிஎன்சி ஆலங்குளத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று (27-02-2026) மாலை 6.00 மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் தோழர் எம். நடராஜன் தலைமையில் டிஎன்சி முக்கு ரோட்டில் தொடங்கிய ஊர்வலம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயணமாக சென்று, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கட்சித் தொண்டர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தோழர் கண்ணன், சி.ஐ.டி.யு. சார்பில் பெரிய சர்க்கரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சின்னப்பராஜ் மற்றும் புதிய ஒன்றிய செயலாளர் அந்தோணி, விடுதலை முன்னணியின் தலைவர் பெனடிக் பிரபாகரன், தொமுசா சங்கத்தின் மூத்த தலைவர் வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார செயலாளர் எஸ். கிருஷ்ணசாமி, தமிழ் புலிகள் கட்சியின் சாத்தூர் தொகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட அமைப்புத் தலைவர் முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாளர் வி. ஜெயப்பிரகாஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. பிரணவமணி, எஸ். அய்யாச்சாமி, வி. கூடலிங்கம், பி. உதயசூரியன், எம். கணேசன், வி. உஷாராணி, எஸ். பெருமாள், சந்தன மாரியப்பன், கே. முத்துராஜ், எம். மாரியப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு எஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பி. பொன்னம்மாள், ராமலட்சுமி உள்ளிட்ட தொழிலாளர் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் முடிவில் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அனைவரும் அமைதியாக அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் போது பகுதி முழுவதும் மரியாதை மற்றும் அமைதி நிலவியது.