• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மறைந்த நல்லகண்ணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்..,

நாகர்கோவில் பொதுவுடைமை இயக்கம் தலைவர் ஜீவானந்தம் சிலை முன்பில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் மறைந்த நல்லகண்ணுக்கு
அஞ்சலி செலுத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானதோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார், இதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த விதமாக அனைத்து கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் அமைந்துள்ள ஜீவா சிலை முன்பு மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த மௌன அஞ்சலி இரங்கல் கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிஜயூடி நிர்வாகி நூர்முகமது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நாம் தமிழர் கட்சி மரியஜெனிபர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பகலவன், தமிழக வெற்றி கழகம் சார்பில் எஸ் ஆர் மாதவன் உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.