• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திருவனந்தபுரத்தில்அய்யா வைகுண்டர் நினைவு மண்டபம் கால்கோள் விழா..,

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான குமரி மாவட்டம் சாமிதோப்பில் அவதரித்த அய்யா வைகுண்டர் தோற்றுவித்த ‘அய்யா வழி’ என்ற சமுதாய அமைப்பு
மனிதர்களில் சமயம் பாராது அனைவரும் சமம் என்ற கருத்தை அய்ய்வின் ‘அகிலத்திரட்டு’என்னும் நூலை தந்த அய்யா வைகுண்டர்.

அரசனின் முன்னில் மட்டும் அல்ல தெய்வத்தின் முன்னிலும் தலையில் தலைப்பாகை கட்டியே வழிபடும் புதிய வழிபாட்டு மேறையை தோற்றுவித்த, அய்யா வழி பாட்டு முறை தமிழகத்தை போல் கேரளம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பின்பற்றும் நம்பிக்கையாக உள்ளது.

கேரளம் முதல்வர் பிரணராய்விஜயன். ரூ.3.50.கோடி நிதி ஒதுக்கீட்டில். திருவனந்தபுரம்
பழைய தலைமை செயலகம் கட்டிடத்தின் அருகில் அய்யா வைகுண்டர் நினைவு மண்டபம் பணிக்கான கால்கோள் விழா (பெப்ரவரி_28)ம்நாள் மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதை.

கேரளம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காமராஜ் பவுன்டேஷனின் தலைவருமான நீலலோகிதாசன் கன்னியாகுமரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததோடு.
இந்த நிகழ்வில்.குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த அய்யாவின் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது போன்று, கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த அய்யாவின் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில். கேரளம் நவோதயசமதி அமைப்பின் அரசின் செயலாளர் ராமசந்திரன், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட் பணி. ஜான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பாலபிரஜாதிபதி அடிகளார் தமிழக அரசிற்கு வைத்த கோரிக்கை.

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் சாலை என பெயர் சூட்டவேண்டும், அய்யாவின் ஜென்மதினத்தன்று தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு விடுமுறை அனுமதிக்க வேண்டும். இது போன்று டாஸ்மாக் கடைகள் அன்றைய தினத்தில் முழுமையாக அமைக்கவேண்டும் என தெரிவித்தவர்.

நாளை(பெப்ரவரி_28)ம் நாள் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான வாகனங்களில் அய்யாவின் பக்தர்கள் இந்த விழாவிற்கு செல்ல உள்ளார்கள் எனவும் தெரிவித்த அடிகளார், கேரளம் அரசின் முதல்வர் பிராணயாமம் விஜயன் எடுத்துள்ள அய்யாவுக்கு நினைவு மண்டபம் போன்று சாமிதோப்பில் தமிழக அரசின் சார்பில் நினைவு மண்டபம் கட்டும் முனைப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்
வெளிப்படுத்தினார்.