• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பூமி பூஜை பணியை துவங்கி வைத்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்..,

ByRadhakrishnan Thangaraj

Feb 26, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே OP கிருஷ்ணாபுரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலையம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் பழமையானதாகவும் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாலும் காவல் நிலையத்திற்கு என்று சொந்தமாக கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 1. கோடி 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இன்று சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பீபி மற்றும் AEE பாவனி ஆகியோர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்
சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன். சார்பு ஆய்வாளர் ஜோதி மற்றும் காவலர்கள் அப்பகுதி சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.