• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மக்கள் நலக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்..,

ByK Kaliraj

Feb 25, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் அருகே முத்தாண்டியாபுரம் பகுதியில் 30 லட்சம் மதிப்பிலான மக்கள் நலக்கூட கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், கிருஷ்ணகுமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.