விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உலகத்தை எட்டாவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஏழாயிரம்பண்ணை முக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட கழக துணைச் செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ராஜா சிங் ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சாத்தூர் நகரக் கழக செயலாளர் இளங்கோ முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் பூபாலன் அமைப்புசாரா ஒன்றிய செயலாளர் கருப்பசாமி யாதவ் உள்ளிட்ட அஇஅதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. வந்திருந்த பொதுமக்களும் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






