• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதுரை வேலம்மாள் மருத்துவமனை மூளை நரம்பியல் மருத்துவர் டாக்டர் கவிதா பேட்டி..,

ByKalamegam Viswanathan

Feb 24, 2026

மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை தலைமை மருத்துவர் கணேஷ்குமார் கூறுகையில் இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு இரத்த வெடிப்பு போன்றவற்றிற்கு ஆஞ்சியோ சிகிச்சை மூலம் உடனடி சிகிச்சை அளித்து பக்கவாதம் போன்ற நோய்களை தடுத்து விடலாம்

Befast எனப்படும் மருத்துவ அறிவியலின் மூலம் கண், உளறல் பேச்சு, தூக்கமின்மை, உடல் திறன்,கை கால் செயலிழப்பு,படபடப்பு போன்றவைகள் பக்கவாதம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் கோல்டன் அவர் எனப்படும் தங்க நேரத்தில் நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்தால் நோயாளியை முற்றிலுமாக பக்கவாதம் மற்றும் செயல் திறன் அற்றவரை மருத்துவ சிகிச்சையின் மூலம். பக்கவாதம் அற்ற முழு மனிதராக மாற்ற முடியும்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் முதல் நிலை மருத்துவர் டாக்டர் கவிதா கூறுகையில்

பக்கவாதம் ஏற்பட்ட 24 மணி Circumstances சிகிச்சை பெற வந்தால் நோயாளிக்கு சிறு குறையில்லாமல் குணப்படுத்த முடியும்

மேலும் மூளை மற்றும் நரம்பியல் துறைகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய இதயத்திற்கு செய்யப்படும் ஆஞ்சியோ போல் மூளையிலும் ஆஞ்சியோ சிகிட்சையழித்து ஸ்டன்ட் பொருத்தப்படும் .

இதய நாளங்களில் பொருத்தப்படும் சன் போல் இல்லாமல் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றும் ரத்த வெடிப்பு ஏற்படும் சிகிச்சைக்கு மூலம் சிகிச்சை அளித்த பின் உடனடியாக எடுத்து விட முடியும் ஆகையால் நோயாளிக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பம் உதவுகிறது

சிகிச்சைக்குப் பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம் பிசியோதெரபி உடல் நலன் மற்றும் மன நலன் சிகிச்சை அளிக்கப்படுகிறது இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சிகிச்சைக்கு பின் இயல்பு வாழ்க்கையை துவங்க எளிதான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது உலகத் தரமான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் செய்வதன் மூலம் உடனடியாக நோயாளிகள் சிகிச்சை எடுத்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேலம்மாள் மருத்துவமனை சிறப்பான ஏற்பாடுகள் செய்கிறது என Dr கவிதா கூறினார்

மேலும் வேலம்மாள் மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் துறை நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர்கள், கதிரியக்க துறை முதன்மை மருத்துவர்கள் கதிரியக்கத்துறை அலுவலர்கள் மருத்துவ குழுவினர் டாக்டர் அமல்ராஜ் டாக்டர் சக்தி மகேந்திரன் டாக்டர் அமுதா பாரதி டாக்டர் பஞ்சாபிகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.