சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை திறந்து வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது,

இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி
தேமுதிக வருகையினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பது பொய்யான கருத்து திமுக, காங்கிரஸ், உறவு என்பது நீண்ட கால உறவு.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது, திமுக குழு அமைத்தவுடன் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தும்.
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என மணிசங்கர் ஐயர் கூறிய கருத்திற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், மணிசங்கர் ஐயர் காங்கிரஸ் கட்சியிலேயே இல்லாதவர், அவருக்கு வயதாகி விட்டது, அவரது பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,
காங்கிரஸ் கட்சியின் நிலைகளை தவறி பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மணி சங்கர் குறித்து பேச தேவையில்லை
காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்பது மணிசங்கர் ஐயருக்கே தெரியாது

இந்தியா கூட்டணியில் இல்லாத மணிசங்கர், சீமான், ஆகியோரெல்லாம் பற்றி பேசுகிறார்கள்
இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலின் வலுவான தலைவராக உள்ளதாக சீமான் கூறிய கருத்திற்கு பதில் அளித்துள்ள மாணிக்கம் தாகூர்,
இந்தியா கூட்டணியில் தமிழக முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை மிக முக்கியமான அங்கம் வகிப்பவர், எதிர்க்கட்சித் தலைவர்களிலேயே முக்கியமான தலைவராக அவர் உள்ளார்.
இந்தியா கூட்டணிக்குட்பட்ட பிரச்சனைகளை இந்தியா கூட்டணியில் இல்லாதவர்கள் பேசுவது வழிப்போக்கர்கள் சொல்வது போல் எடுத்துக்கொள்ள வேண்டும்
சீமான் தனது கட்சியை காப்பாற்ற வேண்டிய வேலையை பார்க்க வேண்டும், நாம் தமிழர் கட்சி சுருங்கி கொண்டு இருப்பதாக தகவல் வருகிறது, இளம் வாக்காளர்கள் சீசனுக்கு வந்துவிட்டு செல்வது போல் கட்சியிலிருந்து செல்வதை சீமான் கவனிக்க வேண்டும்
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்
சிவகாசியில் துவங்கி எந்த இடமாக இருந்தாலும் அதிமுகவிற்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும்
அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து 18 முதல் 20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் வாங்காது.
20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற முடியாது என்பது அதிமுக மற்றும் பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் எத்தனை பேர் தேர்தலில் நிற்காமல் தப்பி ஓடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தேர்தலில் போட்டியிடவில்லை என்ற வார்த்தை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களிடமிருந்து வர உள்ளது. என்.டி.ஏ கூட்டணி என்பது ஓட்டைப்பானை, பானை இருக்கும் ஆனால் தண்ணீர் இருக்காது.
தோல்வி பயத்தால் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தொகுதி மாற உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பாஜக இணைந்தால் மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணியாகிவிட்டது.
1996ம் ஆண்டிற்கு முன்னாள் இருந்த பாஜகவாக பின்னோக்கி சென்றுவிட்டது. பாஜகவின் நிலை மிக மோசமாக உள்ளது. தமிழக மக்களுக்கு எதிரான கட்சிகளாக பாஜக இருக்கிறது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் நான் தெளிவாக இருக்கிறேன்.
விருதுநகர் தொகுதிக்காக எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக மக்களின் குரலாக இருப்பேன். எனக்கும் விருதுநகருக்குமான உறவு என்பது மிகவும் அன்பான உறவு.
அன்பான உறவுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பிரச்சனைக்காக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை குரல் கொடுப்பேன்.
அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் கொண்டு வந்ததாக அமித்ஷா மோடியிடம் தவறான தகவல் சொல்லி இருக்கிறார். மே மாதத்திற்குள் மோடிக்கு புரிந்துவிடும்.
பிரதமராக அடிக்கடி தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி பிரச்சாரத்திற்கு அவரது வருகை படிப்படியாக குறைந்து விடும். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான செயல்களை மோடி செய்து கொண்டிருப்பதன் எதிரொலியாக மோடியை தமிழக மக்கள் நிராகரித்து விட்டார்கள்,
மதுரை எய்ம்ஸ் காலதாமதத்திற்கு மாநில அரசே காரணம் என அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர்,

எய்ம்ஸ் அமையும் இடத்தில் மரத்தை அகற்ற கால தாமதப்படுத்தியதாக கூறுவது முற்றிலும் பொய்யானது. அங்கு மரமே கிடையாது, ஜப்பான் நிறுவனம் விதித்த தொழிலாளர் பணி நடைமுறையை எய்ம்ஸ் ஒப்பந்த நிறுவனமான எல் & டி நிறுவனம் பின்பற்றாததே எய்ம்ஸ் கட்டுமான பணி காலதாமதத்திற்கு காரணம் என பதில் அளித்தார்.
கூட்டணி ஆட்சி குறித்த தங்களது கருத்து வெளிப்பாடு தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு செல்வ பெருந்தகை புகார் அளித்துள்ளது குறித்த கேள்விக்கும் உரிய பதிலளிக்காமல் மழுப்பலாகவே பதில் அளித்து விட்டு சென்றார்.






