மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தானது TN72N2067 திருமங்கலம் அருகே மறவன் குளம் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென முன்பக்க டயரானது வெடித்தது நின்றது.

பேருந்தானது மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். மாற்று பேருந்து மூலமாக சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை அனுப்பி வைத்த ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார். சமீபகாலமாகவே அரசு பேருந்துகளில் டயரானது குறிப்பாக முன் டயர்கள் வெடித்து விபத்து உள்ளாவது பெரும் அச்சத்தை பயணிகளை ஏற்படுத்தி உள்ளது ஓட்டுனர் நம் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன் எதற்கு வீடியோ எடுக்கிறார்கள் என்று கேட்டார் டயர் வெடித்துள்ளது என்று கேட்டதற்கு இல்லை பஞ்சரில் உருண்டு விட்டது என்று சொன்னார்.

அப்படி என்றால் முன் பக்கம் டயர் தானே வெடித்துள்ளது. அப்பொழுது ஓட்டும் பொழுது உங்களுக்கு தெரியவில்லையா என கேட்ட பொழுது அவர் பதில் சொல்லாமல் அங்கு வந்த மற்றொரு பேருந்தில் வேகமாக சென்றுவிட்டார். வேறு பக்கம் ஓடி விட்டார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து முன் பக்க டயர் வெடித்து எதிரே வந்த வாகனத்தின் கார்கள் மீது மோதியதில் சுமார் 10 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் வாகனத்தின் பராமரிப்பில் மெத்தனமாக செயல்படுவதாகவே தெரிகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து கழகங்கள் வாகனம் எடுக்கும் முன்பு அனைத்து சோதனைகளையும் முடித்த பிறகு வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது. பயனியலின் பாதுகாப்பையும் மற்றும் எதிரே வரும் வாகனங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகம்.










