• Sat. Feb 7th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

“ரெட் லேபிள் ” திரைவிமர்சனம்!

Byஜெ.துரை

Feb 7, 2026

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி – லெனின் தயாரித்து கே.ஆர். வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ரெட் லேபிள் “

இத் திரைப்படத்தில்லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் லெனின் தனது கல்லூரியில் மாணவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அந்த வெற்றி செல்லாது என்று ஒரு தலைப் பட்சமாக கல்லூரி செயல்படுகிறது என்று கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு போராடியதில் இவர் வெற்றி பெற்றவராக கல்லூரி அறிவித்தது.

இதனால் அடி தடி,போலீஸ் வழக்கு என்று சுற்றித்திரிந்தவர் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அனைத்தையும் விட்டு விட்டு,தொழில்,காதல் என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இந் நிலையில் மீண்டும் தனது கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மாணவருக்கு உதவியாக பயணிக்கக் கூடிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.

மீண்டும் அடி தடி இல்லாமல் மாணவர் தலைவர் போட்டியில் இவரது சார்பாக இருக்கும் மாணவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கல்லூரியில் மீண்டும் நுழைகிறார் லெனின்.

இன்னொரு பக்கம் தனது காதலிக்கு அவரது மாமாவை திருமணம் செய்து வைக்க தந்தை ஆர்பி உதயகுமார் முடிவு செய்கிறார்.

இந்த விஷயம் காதலியின் மாமாவுக்கு தெரிய வர காதலியை தொந்தரவு செய்கிறார்.

இதில் பொங்கி எழுந்த நாயகன் லெனின் கல்லூரி வளாகத்திற்குள்ளே அவரை கொலை செய்து விடுகிறார்.

இந்தக் கொலையிலிருந்து லெனின் தப்பித்தாரா?தனது காதலியை கரம் பிடித்தாரா?என்ன நோக்கத்திற்காக மீண்டும் கல்லூரியில் நுழைந்த அவரது நோக்கம் நிறைவேறியதா?இதுதான் படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகராக இருந்தாலும் அவரது நடிப்பு அனுபவம் வாய்ந்த நடிப்பாக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

நாயகி அஸ்மின் தனது அளவான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

முனீஷ்காந்த் மற்றும் அனுமோகன் ஆகியோர்கள் திரையில் குறைவாக தோன்றினாலும் ரசிகர்கள் மனதில்இடம் பிடித்துள்ளனர்.

படப்பிடிப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடைபெற்றாலும் காட்சி கேற்றவாறு தனது கேமரா கோணங்களை அங்கும் இங்குமாக திருப்பி சிறப்பாக படம் பிடித்துள்ளார்.ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.

கைலாஷ் மேனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கேற்றவாறு பயணித்திருக்கிறது.

கல்லூரி வாழ்க்கையில் அரசியல் கலந்தால் அதன் விளைவுகள் என்ன என்பதோடு அதில் ஒரு காதல் என சஸ்பென்ஸ் திரில்லராக கதையை சிறப்பாக எழுதி இருக்கிறார் பொன்.பார்த்திபன்.

குறைந்த பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துபடத்தை சிறப்பாக நகர்த்தி உள்ளார்.இயக்குநர் கே.ஆர்.வினோத்.

கல்லூரிக்குள் நடக்கும் கொலை அந்த கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க படத்தின் நாயகன் திட்டம் தீட்டும் காட்சிகள் எனவெவ்வேறு கோணத்தில் படத்தை சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத்,பார்வையாளர்கள் மத்தியில் நிச்சயம் பாராட்டு பெறுவார்.

மொத்தத்தில், ‘ரெட் லேபிள்’ வெற்றி நிச்சயம்.