• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

வால்பாறையில் பள்ளி மாணவனை கரடி கடித்து படுகாயம் – வனத்துறையினர் விசாரணை

வால்பாறையில் சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவனை கரடி தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வயது 17. தந்தையை இழந்த ராகுல் அவருடைய அத்தை வீட்டிலிருந்து பிளஸ் +2 படித்து வருகிறான். இரவு 10 :45 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற மாணவனை புதரில் பதுங்கியிருந்த கரடி பாய்ந்து வந்து கடித்தது. ராகுல் உடனடியாக கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த ராகுல் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். மாணவனை கரடி தாக்கிய சம்பவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.